என்னதான் நம்ம பூந்தி லட்டு ரவா லட்டு சிறுதானிய லட்டு அப்படின்னு நிறைய லட்டு வகைகள் சாப்பிட்டாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கிற திருப்பதி லட்டுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. திருப்பதி லட்டு ஓட மணமே அவ்வளவு சூப்பரா இருக்கும். பச்சைக் கற்பூரம் முந்திரி நெய் கருப்பு திராட்சை அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்றதால சுவை அட்டகாசமா இருக்கும். ருசியான திருப்பதியில் லட்டு சாப்பிடுவதற்கு இனிமேல் திருப்பதி போய் தான் வாங்கிட்டு வரணும் அப்படின்ற அவசியமே கிடையாது. நினைச்ச உடனே வீட்டிலேயே சூப்பரா திருப்பதிலட்டு செய்யலாம். இந்த திருப்பதியில் லட்டு செய்வதற்கு நமக்கு முக்கியமா தேவைப்படுறது கடலை மாவு தான்.
இந்த கடலை மாவு இருந்தா போதும் சூப்பரா அருமையான திருப்பதியில் லட்டு செஞ்சுடலாம். நம்ம கடைகள்ல வாங்குற லட்டு தண்ணீர் ஊத்தி பிசைஞ்சு பூந்தி பொரிச்சு எடுத்து செய்வோம் ஆனா திருப்பதியில் லட்டு செய்வதற்கு நமக்கு பால் தேவைப்படும் கடலை மாவில் பால் சேர்த்து கலந்து பூந்தி பொரிச்சு எடுத்து அரைச்சு நெய்யில சேர்த்து நல்ல வதக்கி நெய்ல பொரிச்சு எடுத்த முந்திரி திராட்சை போட்டு நிறைய நெய் ஊத்தி பச்சை கற்பூரம் எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்.
வீட்டில இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு இந்த லட்டு செஞ்சு கொடுத்தீங்கன்னா திருப்பதி போயிட்டு வந்தீங்களா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு திருப்பதியில் எப்படி இருக்குமோ அதே மாதிரி சுவைல நமக்கு திருப்பதி லட்டு கிடைக்கும். கண்டிப்பா லட்டு சாப்பிடனும் போல இருந்தா இந்த திருப்பதியில் லட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த திருப்பதி லட்டு சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
திருப்பதி லட்டு | Tirupati Laddu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 2 கப் பால்
- 1 1/4 கப் சர்க்கரை
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 2 டேபிள் ஸ்பூன் கற்கண்டு
- 1 துண்டு பச்சை கற்பூரம்
- 15 முந்திரி
- 15 திராட்சை
- 4 டேபிள் ஸ்பூன் நெய்
- 5 ஏலக்காய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை அரிசி மாவு சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து சர்க்கரையை கரைத்துக் கொள்ளவும்.
- பிறகு கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு ஓட்டை கரண்டி எடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து அந்த கரண்டியில் கலந்து வைத்துள்ள மாவை போட்டு பூந்தி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ளதை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை கற்கண்டு பச்சை கற்பூரம் இடித்த ஏலக்காய் சேர்த்து எடுத்து வைத்துள்ள நெய் சேர்த்து நன்றாக கலந்து பெரிய லட்டாக பிடித்து எடுத்தால் சுவையான திருப்பதி லட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட நினைத்தால் தினை லட்டு இப்படி வீட்டிலயே செஞ்சு கொடுங்க!