- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
கோலா உருண்டை என்பது மட்டன் கீமாவை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பரம்பரியமான செட்டிநாடு உணவாகும். மொறுகளான இந்த உருண்டையை வாயில் போட்டவுடனே பூண்டு, சோம்பு என உருண்டையில் சேர்க்கபட்டுள்ள மசாலா பொருட்களின் சுவையை தனித்தனியாக உணரலாம். இந்த பாரம்பரிய செய்முறை மாறாமல் ஒரு சைவ கோலா உருண்டை செய்ய கற்றுக்கொள்வோமா? மட்டன் கீமாவிற்கு பதிலாக வாழைக்காயை வைத்தும் கோலா உருண்டை செய்யலாம். கோலா உருண்டைகளில் பல வகை உண்டு.
அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வாழைக்காய் கோலா உருண்டை. இந்த சைவ கோலா உருண்டையை செய்வது மிகவும் சுலபம். தேவையான மசாலாவை பக்குவமாய் அரைப்பதிலேயே இதன் மொத்த சுவையும் அடங்கி உள்ளது. வழக்கமாக வாழைக்காய் வைத்து பஜ்ஜி,பொரியல், சாப்ஸ் போன்றவையை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர்.
ஆனால் வாழைக்காயை பயன்படுத்தி ஒரு சுவையான சைடிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். இதனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம். இந்த வாழைக்காய் சைவ கோலா உருண்டையை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம். அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த வாழைக்காய் கோலா உருண்டையை செய்து பரிமாறினால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வாழைக்காய் பொடி மாஸ் இப்படி செய்து கொடுத்தால் வாழைக்காய் வேண்டாம் என்று சொல்பவர்களும் தட்டாமல் வாங்கி சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
முதலில் வாழைக்காயை இரண்டாக வெட்டி குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு இதனுடன் வேக வைத்த வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் இந்த கலவையை சிறிது எடுத்து கைகளில் எண்ணெய் தடவி பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்.






