- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
தீபாவளி ரொம்ப பக்கத்துல வந்துருச்சு அதனால எல்லாரும் வீட்லயும் ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. ஒரு சிலர் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ் ஆக இருந்தால் மைதா மாவு சேர்த்து எந்த ஸ்வீட்டும் செய்ய மாட்டாங்க அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும்னா அப்ப கோதுமை மாவு வச்சு இந்த சூப்பரான பாதுஷா செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். ஒரு தடவை இந்த கோதுமை மாவு பாதுஷா செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த ஸ்வீட் செய்யுறதுக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது.
பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மட்டும் கடைகளில் வாங்கிக்கோங்க. மத்த எல்லா பொருட்களுமே நம்ம வீட்டுல தினமும் பயன்படுத்தற பொருட்கள்தான். இது செஞ்சி குழந்தைங்க கையில கொடுத்தீங்கன்னா பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க. சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம பெரியவங்களுமே இத ரசிச்சு ருசிச்சு சாப்பிடு வாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ஸ்வீட் ரெசிபியை இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க. மைதா மாவுல தான் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல மைதா மாவுல செஞ்சாலே நல்ல சாஃப்டா டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான கோதுமை மாவு பாதுஷாவ எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் கோதுமை மாவு இருந்தா போதும் காரசாரமான பீன்ஸ் கோதுமை அடை இப்படி சுலபமாக செய்து விடலாம்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து தயிர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சிட்டிகை உப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவு காய்ந்து போகாமல் இருக்க நெய் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மீதி உள்ள சர்க்கரை சேர்த்து ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் கட்டை விரலால் ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பொறித்து வைத்துள்ளதை சர்க்கரை பாகில் சேர்த்து அரை மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு பாதுஷா தயார்.






