- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
இனிப்பு என்றால் அதிகமானோருக்கு பிடிக்கும். லட்டு, மைசூர்பாக், பாயசம், கேசரி எல்லாம் வீட்டிலேயே செய்துடலாம். இப்போதெல்லாம் ஏதேனும் புதிய வகை ரெசிபியை பார்த்தால் அதை உடனே ட்ரை பன்ன ஆரம்பிச்சிடுறோம். காரணம் என்னனா செய்முறைகள் எளிமையாக இருப்பதால் தான். அந்த வகையில் ஈசியான ஒரு ஸ்வீட் ரெசிபியை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. அது தான் கோதுமை ரவா கேசரி. கேசரினாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். இன்னுமே நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் கல்யாண நாள், பிறந்தநாள் இல்லன்னா ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்குது அப்படின்னாலே நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய ஸ்வீட் கேசரி தான்.
அரிசி ரவை போலவே கோதுமை ரவையிலும் கேசரி செய்யலாம். உடைத்த கோதுமையை கொண்டு செய்யக்கூடிய இந்த கேசரியில், சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்ப்பதால் ஆரோக்கியமான ஒரு இனிப்பு வகை என்றும் கூறலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கும். எப்பவும் வெள்ளை ரவையில் கேசரி செய்து போர் அடித்தவர்கள் ரொம்பவே ஆரோக்கியமான கேசரியான கோதுமை ரவை கேசரி செய்து அசத்துங்கள். இது சற்று சாப்பிடுவதற்கு வித்தியாசமாக குருனை குருனையாக இருக்கும்.
இந்த கேசரிய டயட்ல இருக்குறவங்களும் கூட சாப்பிடலாம். வெல்லம் கொஞ்சம் கம்மியா சேர்த்து இந்த கேசரிய செஞ்சுக்கலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். டயட்ல இல்லாதவங்க உங்களுக்கு எவ்வளவு இனிப்பு வேண்டுமோ அவ்வளவு இனிப்பு சேர்த்து செஞ்சுக்கோங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் எப்பவும் ஒரே மாதிரியா கேசரி செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க அசந்து போய்விடுவார்கள். ஆரோக்கியமான இந்த கோதுமை ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை குஸ்கா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கோதுமை ரவாவை ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு இறக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் தண்ணீர் விட்டு நன்கு பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் நெய் விட்டு வேக வைத்துள்ள ரவாவை சேர்த்து அதனுடன் வெல்லப்பாகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ரவா நன்கு வெந்து வந்ததும் நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கோதுமை ரவா கேசரி தயார்.






