கருப்பு அரிசியில் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா ?

- Advertisement -

நம் முன்னோர்கள் அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய சிவப்பரிசி, பழுப்பு அரிசி, கருப்பரிசி, திணை அரிசி, புழுங்கல் அரிசி, தானியங்கள், பயிர்கள் போன்ற அதிகம் சத்துள்ள உணவுகளை தான் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போது இந்த வெள்ளையரிசி தலை தூக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து நாம் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்த உணவு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழிய தொடங்கி விட்டனர். இப்படி நமது ஆசியா கண்டம் முழுவதும் சாப்பிடும் அரிசி வகைகள் அதிகம் உள்ளது. அதிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது தான் கருப்பு அரிசி. இந்த கருப்பு அரிசியை தடை செய்யப்பட்ட அரிசி, மறைவு அரிசி என்றெல்லாம் கூறுவார்கள். ஏனென்றால் இந்த அரிசி ஒரு கால கட்டங்களில் உயர்ந்த குடியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் தனியாக பயிரிடப்பட்டு அவங்களுக்கு கொடுக்கப்படும். இந்தளவு மகத்துவமான கருப்பு அரிசியை எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. Youtube Sub

- Advertisement -

இதயம்

நாம் உணவாக கருப்பு அரிசியை தினசரி சாப்பிடும் பொழுது. நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து நமக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆனைத்தும் நீங்கி இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெரிதும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : காலையில் குடிக்க வேண்டிய சத்துக்கள் நிறைந்த பானம்!

நீரிழிவு நோய்

கருப்பு அரசியில் அதிகளவிலான நார்ச்சத்துகள் உள்ளது எவ்வளவு என்றால் மற்ற சாதாரண அரிசிகளில் இருக்கும் சத்துக்களின் அளவை விட இரண்டு மடங்கு அதிக அளவு நார்ச்சத்து இந்த கருப்பு அரிசியில் உள்ளது. ஆகையால் கருப்பரிசியை நாம் சாப்பிட நமது உடம்பில் உள்ள நீரிழிவு நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைத்து நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

-விளம்பரம்-

நச்சுகளை நீக்கும்

கருப்பு அரிசி பற்றி ஒரு ஆய்வுவில் கூறுவது கருப்பரசி நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மேலும் நாம் கல்லீரல் பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களையும் நம்முடன் இருந்து வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் ஆகையால் நம் உணவில் கருப்பரிசியையும் சேர்த்துக் கொள்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள் : இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்!

உடல் எடை

அடிக்கடி நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நம்மளது உடல் எடை அதிகரித்து கொண்டே போவோம். நாம் கருப்பு அரிசியை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் பசி எடுக்கும் உணர்வை குறைத்து நம் உடல் எடை கூடுவதை தடுக்கும் மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் உடல் எடையை குறைப்பதற்கும் நேரடியாக உதவி செய்கிறது.

-விளம்பரம்-

ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்

நம் கருப்பு அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளதால் நம் உடலுக்கு ஏற்படும் பல நோய்களை கட்டுப்படுத்தி. நம் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மேலும் நாம் கருப்பு அரிசியை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் தன்மையும் கருப்பு அரிசிக்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here