தித்திக்கும் சுவையில் கருப்பட்டி மோதகம் எப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : இப்படி ஒரு தரம் தேங்காய் மோதகம் செஞ்சி பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

- Advertisement -

வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலாடை / சிற்றுண்டி!
இதில் கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தரும். கருப்பட்டியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, கால்சியம் நிறைந்துள்ளது, செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது மற்றும் ஆற்றலுக்கு சிறந்த ஆதாரமாகவும் உள்ளது

Print
No ratings yet

கருப்பட்டி மோதகம் | Karupatti Mothagam Recipe in Tamil

மோதகம் என்றாலே நமக்கு விநாயகர் நினைவில் வருவார்.. இது பாரம்பரியமாக விநாயக சதுர்த்திக்காக செய்யப்படுவது. மோதகம் அல்லது கொழுக்கட்டை என்பது,ஒரு சுவையான இனிப்பு பலகாரம். அரிசி மாவு மாவில் பனை வெல்லம் தேங்காய் பூரணத்தை நிரப்பி/ திணித்து, முழுதாக வேக வைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலாடை / சிற்றுண்டி.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Kolukattai, மோதகம்
Yield: 4 People
Calories: 45kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 இட்லி அடுப்பு

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பச்சரிசி
  • 50 கிராம் துருவிய கருப்பட்டி
  • நெய் தேவையான அளவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 Tsp ஏலக்காய் பொடி

செய்முறை

  • பச்சரிசியை நன்றாக ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பூரணத்திற்கு துருவிய தேங்காய், கருப்பட்டி, ஏலக்காய் கலந்து தயாரித்துக் கொள்ளவும்
  • வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் நெய், உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கிளறவும்.
  • பின் கிளறிவிடும் போது தீயை மிதமாக ஏறிய விட்டு கையில் ஒட்டாத வண்ணம் நன்கு கிளறி விடவும்.
  • இப்படி வதக்கிய மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டங்களாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடவும்.
  • உருண்டைகளாக இட்ட கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.
  • ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பட்டி மோதகம் தயாராகிவிட்டது சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 100G | Calories: 45kcal | Carbohydrates: 56g | Protein: 4g | Saturated Fat: 0.1g | Potassium: 26mg | Fiber: 1g | Sugar: 2.6g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here