எப்பொழுதும் பீர்க்கங்காய் பொரியல் அல்லது குழம்பு, கூட்டு செய்தால் அதன் தோலை நீக்கித்தான் செய்வோம்.அந்த தோலை வீணாக தான் குப்பையில் போடுவோம். உங்களுக்கு தெரியுமா அந்த தோலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம் என்று. ஆமாங்க இனி அந்த தோலை
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ருசியான கொள்ளு சட்னி இனி இப்படி செய்து பாருங்க! அதிகமாகவ சாப்பிடுவாங்க!
வீணாக்காதீங்க அந்த தோலில் சுவையாக சட்னி செய்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த கொல்லம் சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
கொல்லம் சட்னி | Kollam Chutney Recipe In Tamil
எப்பொழுதும் பீர்க்கங்காய் பொரியல் அல்லது குழம்பு, கூட்டு செய்தால் அதன் தோலை நீக்கித்தான் செய்வோம்.அந்த தோலை வீணாக தான் குப்பையில் போடுவோம். உங்களுக்கு தெரியுமா அந்த தோலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம் என்று. ஆமாங்க இனி அந்த தோலை வீணாக்காதீங்க அந்த தோலில் சுவையாக சட்னி செய்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Yield: 4 people
Calories: 121kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- ே பீர்க்கங்காய் தோல் மட்டும்
- நல்லெண்ணெய் கொஞ்சம்
- 1 டீஸ்பூன் உளுந்து
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 10 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- கொத்தமல்லி கொஞ்சம்
- புளி நெல்லிக்காய் அளவு
- தேங்காய் துருவல் ஒரு கை பிடி
செய்முறை
- முதலில் 2 பீர்க்கங்காயை தோல் மட்டும் சீவி தனியாக தோலை எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து அத்துடன் பூண்டு, வர மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் அடுப்பை நிறுத்தி தேங்காய் துருவலை சேர்த்து கலந்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
Nutrition
Serving: 450G | Calories: 121kcal | Carbohydrates: 2g | Protein: 9g | Saturated Fat: 0.3g | Potassium: 67mg | Fiber: 6g | Sugar: 0.5g