- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
என்னதான் நாம் மதிய உணவு வயிறு நிறைய சாப்பிட்டாலும் இடையில் சிறிது பசி எடுக்கும் அதற்காக இரவு உணவு வரை நம்மளால் காத்திருக்க முடியாது. அதற்காக மாலை நேரங்களில் சில ஸ்னாக்ஸ் உணவுகளை வெளியே சென்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலை நேரம் சாப்பிடக்கூடிய வகையில் ருசியான மற்றும் மொறு மொறுப்பான இந்த வெங்காய ரிங்க்ஸ் பக்கோடா சரியான முறையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?
இந்த வெங்காய ரிங்ஸ் பக்கோடா உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் அடிக்கடி இதை உங்களை செய்து தர சொல்லியும் உங்களிடம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்களும் அடிக்கடி இதை செய்து கொடுக்கலாம் இனிமேல் மாலை நேரம் எந்த ஸ்னாக்ஸ் செய்வது என்று சிந்திப்பதற்கு பதிலாக இதை செய்து கொடுங்கள். அதனால் இன்று வெங்காய ரிங்ஸ் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெங்காயத்தை பட்டையான வளையங்களாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், பேக்கிங் பவுடர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்துக் கொள்ளவேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவிற்கு எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், ஒரு வெங்காய வளையத்தை எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, பிரட் தூளில் கோட்டிங் கொடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.
இதே போன்று அணைத்து வெங்காய வளையத்தையும் மாவு மற்றும் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே சாட் மசாலாவை தூவி பரிமாறினாள் ருசியான மற்றும் மொறு பொறுவன வெங்காய ரிங்ஸ் ரெடி!!!






