இனிப்பான பன்னீர் தேங்காய் லட்டு உண்மையில் சுவையான மற்றும் உடனடியாக செய்ய கூடிய இனிப்பு உணவு. பண்டிகைகளின் போது நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை தயாரித்து பகிர்ந்து கொடுப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர்,
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி ?
அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நண்டு மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பன்னீர் தேங்காய் லட்டு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பன்னீர் தேங்காய் லட்டு | Paneer Coconut Laddu Receipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 250 gm பன்னீர்
- ¼ cup பொடித்த சர்க்கரை
- 1 tsp ரோஸ் எசென்ஸ்
- 1 cup தேங்காய்
- ½ cup சர்க்கரை
- ¼ tsp ஏலக்காய் தூள்
செய்முறை
- பன்னீர் தேங்காய் லட்டு செய்ய பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும்.
- அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
- சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து கொள்ள வேண்டும்
- அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.சுவையான பன்னீர் தேங்காய் லட்டு தயார்