மொறு மொறுன்னு சுவையான ஜவ்வரிசி அப்பளம் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

நம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வடகம் செய்து சாப்பிடலாம்,இந்த காலத்தில் ஸ்நாக்ஸ் அதிகமாக இருத்தலும் அன்று முதல் இன்று வரை வடகம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கு, நம் பல விதமான வடகம் செய்திருப்போம், ஆனால் ஜவ்வரிசி அப்பளம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்,ஒரு முறை செய்து பார்திருந்தல் அதனை மீண்டும் மீண்டும் செய்வீர்கள்,

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான ஜவ்வரிசி பொங்கல் செய்வது எப்படி ?

- Advertisement -

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணமாக இருக்கும்.அதனால் இன்று இந்த ஜவ்வரிசி அப்பளம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

ஜவ்வரிசி அப்பளம்| Javvarisi Vadagam Recipe in Tamil

நம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வடகம் செய்து சாப்பிடலாம்,இந்த காலத்தில் ஸ்நாக்ஸ் அதிகமாக இருத்தலும் அன்று முதல் இன்று வரை வடகம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கு, நம் பல விதமான வடகம் செய்திருப்போம் ஆனால் ஜவ்வரிசி அப்பளம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்,ஒரு முறை செய்து பார்திருந்தல் அதனை மீண்டும் மீண்டும் செய்வீர்கள்,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணமாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time20 minutes
Total Time25 minutes
Course: LUNCH, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: Appalam, அப்பளம்
Yield: 4

Equipment

 • 1 பாத்திரம்
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 250 கிராம் ஜவ்வரிசி
 • ¾ tsp சீரகம்
 • ½ tsp பெருங்காயம்
 • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் கனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
 • தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசியை தண்ணீர் ரொம்பவும் சேர்த்து கிண்டாமல் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
 • ஜவ்வரிசி பாதி வெந்ததும் பெருங்காயம், சீரகம்,உப்பு சேர்த்து மேல் பாகம் கண்ணாடி போல் ஆகி, உள்ளே சிறிது மட்டும் வெள்ளை தெரியும் போது மூடிவைத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும்
 • பின்னர் கலவையை கரண்டியால் வெள்ளைப் பருத்தித் துணியில் ஊற்ற வேண்டும்.சூரிய வெப்பத்தில் காயப் போட வேண்டும்.
 • காய்ந்த பின்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சுட வைத்து வடகத்தை பொரித்து எடுத்தால் சுவையான ஜவ்வரிசி அப்பளம் ரெடி.

Nutrition

Serving: 400g | Carbohydrates: 70g | Fat: 26g | Cholesterol: 16mg | Potassium: 9mg | Calcium: 10mg

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here